ரஜினி பட நடிகையுடன் கே.எஸ்.ரவிக்குமாருக்கு இரகசிய தொடர்பா.?! விவகாரம் விவாகரத்து வரை சென்றதாக கிசுகிசு.!ks-ravikumar-in-long-term-secret-relationship

கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த பல கமர்சியல் படங்கள் தமிழ் சினிமாவில் ஹிட் கொடுத்துள்ளது. அந்த வகையில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த படையப்பா படம் வணிக ரீதியாக மிகப்பெரிய லாபத்தை கே எஸ் ரவிக்குமாருக்கு அளித்தது. இந்த படத்தில் பிரபல நடிகரான ரஜினிகாந்த், முன்னாள் நடிகரான சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ரஜினிகாந்த் மற்றும் ரம்யா கிருஷ்ணன் இருவருக்குமே இந்த படத்திற்கு பிறகு தான் சினிமா வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனையே ஏற்பட்டது. படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் கேரக்டருக்கு பதிலாக மீனா நடிப்பதாக இருந்தது. ஆனால் ரஜினிகாந்த் நீங்க அதற்கு சரிப்பட்டு வர மாட்டீங்க ன்னு சொன்னதாகவும் கே எஸ் ரவிக்குமாரும் அதற்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்றும் தகவல் வெளியானது. 

KS Ravikumar

கே எஸ் ரவிக்குமார் தனது படங்களில் ரம்யா கிருஷ்ணனையே அதிகம் நடிக்க வைத்துள்ளார். இந்நிலையில், அந்த காலக்கட்டத்தில் கோடம்பாக்கத்தில் இவர்கள் இருவரை பற்றியும் கிசு கிசு வார்த்தைகள் வெளிவந்தன. கே எஸ் ரவிக்குமார் ரம்யா கிருஷ்ணனையே தனது படத்தில் அதிகம் நடிக்க வைப்பதால் இவர்களுக்கிடையே ரகசிய காதல் அல்லது இரகசிய உறவு இருப்பதாக பேச்சுவார்த்தை அடிபட்டு வந்தது. 

KS Ravikumar

இவர்களின் ரகசிய உறவு பற்றி கே எஸ் ரவிக்குமாரின் மனைவிக்கு தெரிய வந்ததாகவும், எனவே, அவர் விவாகரத்து கொடுக்கப் போவதாகவும் கூறப்பட்டது. பிறகு தனது மூன்று மகள்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு விவாகரத்தை ரத்து செய்து கணவனுக்கு எச்சரிக்கை விடுத்து மீண்டும் தன் குடும்பத்தில் இணைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.