பிரபல காமெடி நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்! சோகத்தில் திரைத்துறையினர்!

பிரபல காமெடி நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்! சோகத்தில் திரைத்துறையினர்!


krishnamurthi-died

பிரபல தமிழ் சினிமா காமெடி நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார். எதிர்பாராத விதமாக இன்று அதிகாலை 4.30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

தமிழ் சினிமாவில் நான், தவசி, எல்லாம் அவன் செயல், நான் கடவுள் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அதிலும் வடிவேலு அவர்களுடன் நடித்து பிரபலமான எஸ்க்யூஸ்மி, இவர் அட்ரஸ் தெரியுமா? என்று வடிவேலுவிடம் பின்லேடன் முகவரி கேட்பது அனைவராலும் ரசிக்க பட்டது.

Krishnamurthi

இந்நிலையில் இவர் தனது படப்பிடிப்புக்காக குமுளி சென்றிருந்த போது திடீரென அதிகாலை 4.30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இந்நிகழ்வு திரைத்துறையினர் மற்றும் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.