அட நம்ம கோவை சரளாவா இது...! வித்தியாசமான லுக்கில் ஆளே மாறிவிட்டாரே...!Kovai sarala new look for sembi movie

மைனா, கும்கி, கயல் படத்தை  இயக்கிய  பிரபு சாலமன் இயக்கத்தில் குக் வித் கோமாளி புகழ் அஸ்வின், கோவை சரளா நடிப்பில் விரைவில் வெளியாகப் போகும் திரைப்படம் செம்பி.

இதுவரை காமெடி வேடங்களில் மட்டுமே நடித்துவந்த கோவை சரளா இந்த படத்தில் சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருடன் குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் அஸ்வின் நடிக்கிறார். மிகவும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் ஃபஸ்ட் லுக் தற்போது வெளியாகி ரசிகர்கள்  மத்தியில் வைரலாகி  வருகிறது.

இந்த பர்ஸ்ட் லுக்கில் மிகவும் வித்தியாசமாக காணப்படுகிறார் கோவை சரளா. இந்தப் படம் கொடைக்கானலில் இருந்து திண்டுக்கல்லுக்கு பேருந்து மூலம் செல்லும் பயணிகளின் கதையை சொல்கிறது. இதோ  இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் புகைப்படம்....

Kovai sarala