சினிமா

பிரபல இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை! என்ன காரணம்? அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

Summary:

பிரபல இளம்நடிகை தூக்கிட்டு தற்கொலை! என்ன காரணம்? அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

மேற்கு வங்கத்தில் பிரபல மாடல் அழகியாகவும், நடிகையாகவும் திகழ்ந்து வந்தவர் பிதிஷா டி மஜூம்தார். 21 வயது நிறைந்த இவர் கல்கத்தாவில் டம்டம் என்ற பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் கடந்த 3 ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வெகு நேரமாகியும் அவரது வீட்டின் கதவு திறக்கப்படவில்லை.

இந்த நிலையில் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனே இதுகுறித்து போலீசாரிடம் தகவல் அளித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பிதிஷா மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் பிதிசா தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய கடிதம் ஒன்றை கைப்பற்றியுள்ளனர். மேலும் பிதிஷா கடந்த சில நாட்களாக தன் ஆண் நண்பரின் நடவடிக்கையால் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் அவரிடமும் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement