50 உணவு ஸ்டால்கள்; 100 வகையான மெனு.! படுகோலாகலமாக நடக்கும் பாலிவுட் நட்சத்திரங்களின் திருமணம்.!

50 உணவு ஸ்டால்கள்; 100 வகையான மெனு.! படுகோலாகலமாக நடக்கும் பாலிவுட் நட்சத்திரங்களின் திருமணம்.!


Kiara adwani, siddharth malkothra marriage

பாலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் நடிகை கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்கோத்ரா இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், அவர்களது திருமணம் ராஜஸ்தான் ஜெய்சால்மரில் உள்ள சூரியகர் பேலஸ் ஹோட்டலில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த திருமணம் நேற்று நடக்கவிருந்த நிலையில் சில காரணங்களால் இன்று நடைபெறுகிறது.

இந்த திருமண விழாவில் பாலிவுட் நட்சத்திரங்கள் கரண் ஜோகர், சோனாக்ஷி சின்கா, சாகித் கபூர், அவரது மனைவி, நடிகை ஜுஹி சாவ்லா, பூஜா ஷெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனராம். மேலும் முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானி தனது கணவருடன் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார்.

Kiara adwani

 திருமணம் நடைபெறும் ஹோட்டலில் 50க்கும் மேற்பட்ட உணவு ஸ்டால்கள் அமைக்கப்பட்டு சைனீஸ், இத்தாலியன், அமெரிக்கன், ராஜஸ்தானி, குஜராத்தி என பல வகையான உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம். அதாவது 100க்கும் அதிகமான உணவு வகைகள் விருந்தினர்களுக்காக தயார் செய்யப்பட்டுள்ளதாம். அதுமட்டுமின்றி விருந்தினர்களை கவனிக்க மும்பையில் இருந்து 200 பேர், டெல்லியில் இருந்து 300 பேர் என 500 வெயிட்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனராம். திருமணத்திற்கு பின் வரும் 12ஆம் தேதி மும்பையில் திருமண வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.