சினிமா

திடீரென பயங்கர ஸ்லிம்மாக மாறிய நடிகை கீர்த்தி சுரேஷ்! ஷாக் புகைப்படம்!

Summary:

Keerthy suresh new slim look photos

விஜய், விஷால், சூர்யா, சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமாவின் அணைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்திவிட்டார் கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவில் உள்ளே வந்த சிறிது காலத்திலேயே அசைக்க முடியாத இடத்திற்கு சென்றுவிட்டார் நடிகை கீர்த்தி.

தனி ஒரு நடிகையாக இவர் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இவரது நடிப்பை அணைத்து நடிகர் நடிகைகளும் பாராட்டினார்கள். மேலும் விஷாலுடன் சண்டக்கோழி 2 , விக்ரமுடன் சாமி 2 , தளபதி விஜய்யுடன் சர்க்கார் என அடுத்தடுத்து மெஹா ஸ்டார்களுடன் நடித்து மேலும் பிரபலமாகிவிட்டார் கீர்த்தி.

கடைசியாக நடித்த சர்க்கார் படத்திற்கு பிறகு எந்த படத்திலும் கீர்த்தி ஒப்பந்தமாகாமல் ஓய்வெடுத்துவருகிறார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் சற்று உடல் எடை கூடிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் கலைக்கப்பட்டது.

இந்நிலையில் உடல் எடை குறைந்து படு ஸ்லிம்மான தோற்றத்துக்கு மாறியுள்ளார் கீர்த்தி சுரேஷ். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகிவருகிறது.


Advertisement