கல்யாணம் எப்போ?? குட் நியூஸ் சொன்ன பிக்பாஸ் அருண்.! ரசிகர்கள் வாழ்த்து!!
என்னது.. கீர்த்தி சுரேஷும் ஆரம்பிச்சிட்டாங்களா! அவரே வெளியிட்ட அசத்தலான தகவல்! உற்சாகத்தில் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அதனைத் தொடர்ந்து அவர் விஜய், விக்ரம், சிவகார்த்திகேயன், சூர்யா, விஷால், தனுஷ் என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களிலும் முன்னணி பிரபலங்கள் உடன் இணைந்து நடித்து டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருகிறார். மேலும் அவரது கைவசம் தற்போது பல படங்கள் உள்ளன. இந்த நிலையில் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் புதிய முயற்சியாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளார்.
Hello! Excited to be launching my official YouTube channel today! Do click on the link to subscribe and keep watching! 😊✨https://t.co/W3UqhVHvD8 @YouTubeIndia #youtubeshorts pic.twitter.com/uolMqnfdqP
— Keerthy Suresh (@KeerthyOfficial) January 26, 2022
பிரபலங்கள் பலரும் யூடியூப் சேனலை தொடங்கி பல வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில், தற்போது நடிகை கீர்த்தி சுரேஷூம் தனது பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த தகவலை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.