என் மகனுக்கு 3 வயசாயிருச்சு.. ரசிகர்களுக்கு செம ஷாக் கொடுத்த நடிகை கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் புகைப்படம்!!

என் மகனுக்கு 3 வயசாயிருச்சு.. ரசிகர்களுக்கு செம ஷாக் கொடுத்த நடிகை கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் புகைப்படம்!!


keerthi suresh shares her petdog birthday celebration

தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அதனை தொடர்ந்து அவர் விஜய், விக்ரம், சிவகார்த்திகேயன், சூர்யா, விஷால், தனுஷ் என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர்.

கீர்த்தி சுரேஷ் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ் கைவசம் தற்போது செல்வராகவனுடன் சாணிக் காயிதம், ரஜினியுடன் அண்ணாத்த போன்ற திரைப்படங்கள் உள்ளன. இந்நிலையில் நடிகர் கீர்த்தி சுரேஷ் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது தனது செல்ல நாய்குட்டியின் பிறந்தநாளை கொண்டாடிய அவர், அதனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, எனது ஆண் குழந்தைக்கு 3 வயதாகிவிட்டது. என்னால் நம்பவே முடியவில்லை. முதல்நாளில் நான் பார்த்த மாதிரியே இருக்கிறது. எனது சிறந்த அல்லது இருண்ட நாட்களில் நீங்கள் எனக்குள் நிரப்பிய மகிழ்ச்சி கற்பனை செய்ய முடியாதது. என்மீது அளவுகடந்த அன்பு செலுத்துகிறாய். நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன் nyke என பதிவிட்டுள்ளார்.