ப்ளீஸ்.. தவறாம இதை செய்யுங்க! அது நம்ம பொறுப்பு! அக்கறையோடு நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட வீடியோ!!

ப்ளீஸ்.. தவறாம இதை செய்யுங்க! அது நம்ம பொறுப்பு! அக்கறையோடு நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட வீடியோ!!


keerthi-suresh-corono-awarness-video-viral

தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது அலையாக பெருமளவில் பரவி கோரத்தாண்டவமாடி வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் நடிகை கீர்த்தி சுரேஷ் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், கொரோனா வைரஸை முழுமையாக கட்டுப்படுத்த நாமே சிறுசிறு வழிமுறைகளை ஒழுங்காக பின்பற்றினால் போதும். தேவையில்லாமல் வெளியே போகாதீர்கள். அப்படியே  போனால் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள். அவசியமான இடத்தில் இரட்டை மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள். தவறாமல் சமூக இடைவெளியை கடைபிடியுங்கள். கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். 

நான் எனது முதல் டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்டேன். நீங்கள் இன்னும் போடவில்லையென்றால் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். நம்மையும், நம்மை சுற்றி இருப்பவர்களையும் பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டியது நமது பொறுப்பு. கொரோனாவை வெல்வோம், மக்களை காப்போம். கொரோனா இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம் என கூறியுள்ளார்.