என்னது.. இவரா.! பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து விலகுகிறாரா இந்த முக்கிய பிரபலம்.! ஷாக்கான ரசிகர்கள்!!

என்னது.. இவரா.! பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து விலகுகிறாரா இந்த முக்கிய பிரபலம்.! ஷாக்கான ரசிகர்கள்!!



kayal-pappa-releaving-from-pandian-stores-serial-news-v

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டுக்குடும்பம், அண்ணன் தம்பிகளின் பாசம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வந்த இத்தொடரில் தற்போது கதையில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

அண்ணன் தம்பிகள் சண்டை போட்டுக்கொண்டு தனித்தனியே குடும்பம் நடத்துவது போல் காட்சிகள் ஒளிபரப்பாகி வந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் சேர்வதற்கான வாய்ப்புகள் வந்திருக்கிறது. இந்த தொடரில் பிறந்த சில காலங்களில் இருந்தே கயல் பாப்பாவாக நடித்து வருபவர் ஹாசினி. ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த கயல் பாப்பா தற்போது தொடரில் இருந்து விலகப் போவதாக தகவல்கள் பரவி வருகிறது.

kayal

இதுகுறித்து அண்மையில் பேட்டியளித்த கயல் பாப்பாவின் அம்மா கூறுகையில், இனி அதற்கு வாய்ப்பிருக்கிறது. கயலுக்கு பதிலாக அவருடைய அக்காவை நடிப்பதற்காக கேட்டுள்ளார்கள். நாங்களும் சரி என்று கூறியுள்ளோம். கயலின் அக்காவும் நடிப்பதற்கு ரொம்ப ஆர்வமாக இருக்கிறார் என கூறியிருக்கிறார்.