சினிமா

பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய கவின், நேராக எங்கே சென்று , யாரை சந்தித்துள்ளார் பார்த்தீர்களா!!தெரியுமா?

Summary:

kavin takeout her mother from jail

திருச்சியில் சீட்டு கம்பெனி நடத்தி மோசடி செய்த  வழக்கில் நடிகரும், பிக்பாஸ் போட்டியாளருமான கவின் அம்மா ராஜலக்ஷ்மி, அவரது பாட்டி தமயந்தி கவின் குடும்பத்தினைச் சேர்ந்த 3 பெண்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களுக்கு எதிராக அவரிடம் சீட்டு கட்டி ஏமாந்ததாக 34 பேர் சாட்சி அளித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணைக்கு வந்தநிலையில் சீட்டு கம்பெனி நடத்திய கவின் தாய் மற்றும் அவரது பாட்டி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதனால் அவர்களுக்கு மோசடி வழக்கில் ஐந்து ஆண்டு சிறையும், 2 ஆயிரம் அபராதமும் விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு 29 லட்சம் ரூபாயை கொடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

kavin-rescued-his-mother-from-jail-on-bail

மேலும் அம்மா கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டபோது கவின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்ததால் அவருக்கு எந்த தகவலும் தெரியவில்லை. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பிக்பாஸ்  வீட்டிலிருந்து வெளிவந்த கவின் தீவிர முயற்சியால் தனது அம்மாவினையும், பாட்டியையும் ஜாமின் எடுத்துள்ளார். மேலும் அதுமட்டுமின்றி தனது பாட்டி நடத்தி வந்த சீட்டு கம்பெனியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவரவர் பணத்தினை விரைவில் திருப்பி கொடுத்துவிடுவேன் என்று வாக்குறுதி அளித்ததாகவும் கூறப்படுகிறது.
 


Advertisement