சினிமா

பிக்பாஸ் கவினா இது! ஹேர்ஸ்டைலாம் மாத்தி ஆள் அடையாளமே தெரியலையே! புகைப்படத்தை கண்டு ஷாக்கான ரசிகர்கள்!

Summary:

Kavin latest photo viral

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகர் கவின். அதனைத் தொடர்ந்து அவர் சில திரைப்படங்களிலும் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.

இந்நிலையிலேயே கவின் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆரம்பத்தில் ஆர்மி வைக்கும் அளவிற்கு ரசிகர்களிடையே பிரபலமடைந்த அவர் லாஸ்லியாவுடன்  காதல் விவகாரத்தில் சிக்கி சர்ச்சைக்குள்ளானார்.


பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வந்தபின் கவின் சில படங்களில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமானார். மேலும் லிப்ட் என்ற படத்திலும் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் பிசியாக இருக்கும் கவின் தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,  அவர் தனது தோற்றத்தையும், ஹேர்ஸ்டைலையும் மாற்றி வித்தியாசமாக மாறியுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் கவினா இது என ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.


Advertisement