வெள்ளை நிற வேஷ்டி சட்டையில் கலக்கலாக போஸ் கொடுத்துள்ள கவின்! தீயாய் பரவும் புகைப்படம்.

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்னும் சீரியலில் நடித்து பிரபலமடைந்தவர் கவின். அதன் பிறகு நீண்ட இடைவெளியில் இருந்த கவின் மீண்டும் பிக்பாஸ் சீசன் 3 யில் கலந்து கொண்டு மக்களின் மனதை கவர்ந்தார்.
பிக்பாஸ் வீட்டில் இவர் நட்புக்கு கொடுக்கும் மரியாதை அனைவராலும் விரும்பப்பட்டது. அதன் பிறகு லாஸ்லியாவிடையேயான காதல் அனைத்தும் ரசிக்கும் படியாக இருந்தது. இதனால் இவருக்கு ஏகப்பட்ட ஆர்மிகள் எல்லாம் உருவானது.
மேலும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் வெள்ளை நிற வேஷ்டி சட்டை அணிந்து செம்மையாக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. தற்போது அப் புகைப்படத்திற்கு ரசிகர்கள் தங்கள் கமெண்ட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.