அடுத்த ஹிட் ரெடி தான்.. நடிகர் கவினை இயக்கப் போகும் மாரி செல்வராஜ்.!Kavin and mari Selvaraj combo

சின்னத்திரையில் இருந்து தனது திறமையின் மூலம் வெள்ளி திரைக்கு பல நடிகர், நடிகைகள் வந்துள்ளனர் மேலும் வெள்ளி திரையிலும் தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து ஜொலித்து வருகின்றனர். சிவகார்த்திகேயன், வாணி போஜன் இந்த வரிசையில் தற்போது கவின் இணைந்துள்ளார்.

kavin

சமீபத்தில் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட திரைப்படம் ' டாடா ' படத்தில் கதாநாயகனான கவினின் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டு வந்தது. இதற்குப் பின்பு கவின் எந்தத் திரைப்படத்தில் நடிக்கப் போகிறார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

இது போன்ற நிலையில், பிரபல இயக்குனரான மாரி செல்வராஜ் இயக்கத்தில் தற்போது கவின் நடிக்கிறார். மாரி செல்வராஜ், கவின் காம்போ மிகப்பெரும் வெற்றி அடையும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

kavin

தற்போது மாரி செல்வ துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கியிருப்பதாகவும், அடுத்ததாக தனுஷ் படத்தை இயக்குவதாகவும், அதன் பின்பே கவினுடன் படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.