என்னது! அப்படியொரு சம்பவமே நடக்கலையா! அப்போ வனிதா சொன்னதெல்லாம்..கஸ்தூரி போட்டுடைத்த உண்மை!

என்னது! அப்படியொரு சம்பவமே நடக்கலையா! அப்போ வனிதா சொன்னதெல்லாம்..கஸ்தூரி போட்டுடைத்த உண்மை!


Kasthuri tweet about vanitha sending legal notice

நடிகை வனிதா கடந்த சில மாதங்களுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். அதனை தொடர்ந்து அவர் நெட்டிசன்களால் மோசமாக விமர்சனம் செய்யப்பட்டு சமூகவலைத்தளங்களில் பேசுபொருளானார்.

இந்நிலையில் பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் தனது கணவர் தன்னை விவாகரத்து செய்யாமல் திருமணம் செய்துகொண்டதாக போலீசில் புகார் அளித்த நிலையில், அவருக்கு ஆதரவாகவும், நடிகை வனிதாவிற்கு எதிராகவும் சூர்யா தேவி என்ற பெண்,  நடிகை கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தர் உள்ளிட்ட பலரும் கருத்துகளை கூறி வந்தனர்.  இந்நிலையில் அவர்களுக்கு பதிலளிக்கும்வகையில் வனிதாவும் மோசமாக கருத்துகளை வெளியிட்டு வந்தார். 

இந்நிலையில்  வனிதா விஜயகுமார் மீது புகார் அளித்த லட்சுமி ராமகிருஷ்ணன், ஒரு கோடியே 25 லட்ச ரூபாய் கேட்டு மானநஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்ததாக வனிதா தகவல் வெளியிட்டார். அதனை தொடர்ந்து வனிதாவும் வக்கீல்கள் மூலம் தானும் நோட்டீஸ் அனுப்பியதாக ஸ்க்ரீன் ஷாட் ஒன்றை  தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். 

இந்நிலையில் இதுகுறித்து டுவீட் செய்த கஸ்தூரி, லட்சுமி மேடம் உங்களுக்கு வக்கீல் நோட்டீஸ் ஏதாவது வந்ததா? ஏனெனில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு என் மீது போலீசில் புகார் அளித்து வழக்குப்பதிவு செய்திருப்பதாக  கூறியிருந்தார்கள். ஆனால் அதுதொடர்பாக இதுவரை யாரும் என்னை தொடர்பு கொண்டு எதுவும்  கேட்கவில்லை என பதிவிட்டுள்ளார்.

மேலும் அடுத்த சில மணி நேரங்களில் தனக்கு எந்த நோட்டீசும் வரவில்லை என லட்சுமிராமகிருஷ்ணன் மேடம் கூறியுள்ளார்கள் எனவும் பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் குழம்பிப் போயுள்ளனர்.