சினிமா பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டில் இவர் தான் செம கவர்ச்சியாக உள்ளார்.! பரபரப்பைக் கிளப்பிய முக்கிய பிரபலம்!!

Summary:

kasthuri talk about bigboss

பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி என்றால் சர்ச்சைகளுக்கும், காதல் காட்சிகளும்  பஞ்சம் இருக்காது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. 

அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 3லும் சர்ச்சைகளுக்கும் சண்டைகளுக்கும் பஞ்சமில்லை. இந்நிலையில் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் வீட்டில் ஆண் போட்டியாளர்களுக்கு அவ்வைசண்முகி டாஸ்க் கொடுக்கபட்டது. அதன்படி ஆண் போட்டியாளர்கள் அனைவரும் பெண் போட்டியாளர்களை போல உடையணிந்து அவர்களைப் போலவே நடந்து கொள்ள வேண்டும். 

இதில் முகேன் ராவ் அபிராமி போலவும்,  மோகன் வைத்யா மதுமிதா போலவும் உடை அணிந்து இருந்தனர். மேலும் சாண்டி மீராமிதுன் போலவும், தர்சன்  வனிதாவை போலவும்,  கவின் நடிகை செர்லின் போலவும் உடை அணிந்து அவர்களை போலவே நடந்து கொண்டனர்.

 இதில் ஷெரின் போல கவின் அணிந்திருந்த ஆடை மிகவும் மிகவும் அரைகுறையாக முகம் சுளிக்கும்படி இருந்தது. இதனால் நெட்டிசன்கள் பலரும் கவின் அணிந்திருந்த ஆடைகள் எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

               

இந்நிலையில் பிரபல நடிகை கஸ்தூரி இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், யாருக்கெல்லாம் ஷெரீனை விட கவின் மிகவும் செக்ஸியாக உள்ளார் என தோன்றுகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கும் ரசிகர்கள் கடுமையாக பதில் அளித்து வருகின்றனர். 


Advertisement