பிக்பாஸ் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த முக்கிய பிரபலம்.! அதிர்ச்சியில் போட்டியாளர்கள்!! வீடியோ இதோ..kashuri-entering-in-bigboss-house

பிக்பாஸ் சீசன் 3 விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 6 பேர் வெளியேறியுள்ளனர். தற்போது 10 பேர் பிக்பாஸ் வீட்டில் விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றைய முன் தினம் ஒருசில காரணங்களுக்காக சரவணன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதற்கு பல்வேறு காரணங்கள் சமூக வலைத்தளங்களில் கூறப்பட்டாலும் உண்மையான காரணம் என்ன என்பது பிக்பாஸுக்கு மட்டுமே தெரியும்.

kasthuri

இவ்வாறு பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் சென்று கொண்டுள்ள வீட்டில் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி கொடுப்பது போன்ற பரிசு ஒன்றை அனுப்பியுள்ளனர்.

பிக்பாஸ் வீட்டில் மிகப்பெரிய பரிசுபெட்டி வைக்கப்பட்டுள்ள நிலையில், அதனை போட்டியாளர்கள் மிகவும் ஆர்வத்துடன் திறந்து பார்த்துள்ளனர். அப்பொழுது அதன் உள்ளே நடிகை கஸ்தூரி அமர்ந்துள்ளார். இதைக்கண்ட பலரும் பெரும் ஆச்சரியம் கலந்த சந்தோஷம் அடைந்தனர். 

மேலும் நடிகை கஸ்தூரி வைல்ட் கார்டு என்ட்ரியில் புதிய போட்டியாளராக செல்கிறாரா அல்லது விருந்திரனாரா வந்துள்ளதா என்பது குறித்து தெரியவில்லை. மேலும் இது குறித்த பிரமோ வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.