பொய் சொல்லி வசமாய் மாட்டிக்கொண்ட கஸ்த்தூரி! வச்சு செய்யும் நெட்டிசன்கள்! என்ன பொய் தெரியுமா?

பொய் சொல்லி வசமாய் மாட்டிக்கொண்ட கஸ்த்தூரி! வச்சு செய்யும் நெட்டிசன்கள்! என்ன பொய் தெரியுமா?


Kashthoori false statement about bigg boss entry

பிக்பாஸ் வீட்டில் இருந்து சரவணன் வெளியேற்றப்பட்டதை அடுத்து அவருக்கு பதில் நடிகை கஸ்த்தூரி பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். தன் மனதில் தோன்றும் கருத்துக்களை வெளிப்படையாக பேசுவதும், அதனால் பல நேரங்களில் சர்ச்சைகளில் சிக்குவதும் இவருக்கு வழக்கமான ஒன்றுதான்.

இந்நிலையில் கடந்த இரண்டு பிக்பாஸ் சீசன்கள் உட்பட சீசன் மூன்றுவரை அதில் நடக்கும் செய்திகளை தனது சமூக வலைத்தளத்தில் மோசமாக விமர்சித்துவந்த கஸ்த்தூரி தற்போது அவரே பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

bigg boss tamil

இவர் அடிக்கடி பிக்பாஸ் குறித்து பேசிவந்ததால் இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லப்போகிறார் என செய்திகள் பரவியது. ஆனால், நான் பிக்பாஸ் வீட்டிற்கு போகப்போறதில்லை, தவறான செய்திகளை பரப்பாதீர்கள் என கஸ்த்தூரி சில நாட்களுக்கு முன்னர்தான் கூறியிருந்தார்.

ஆனால், நேற்று அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றிருப்பது அனைவர் மத்தியிலும் கோவத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இப்படி பொய் சொல்லி மாட்டிக்கொண்டீர்களே கஸ்த்தூரி என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.