சினிமா

அடப்போங்கப்பா.. இதனாலதான் விஜய் என்றாலே வெறுப்பா வருது, கருத்து கூறி ரசிகர்களின் கடுப்பிற்கு ஆளான பிரபல நடிகர்.!

Summary:

karunakaran tweet against vijay

விஜய் ரசிகர்கள் சிலர்  மிக அசிங்கமாக டுவிட்டரில் பேசுவதால்தான் விஜய்யை வெறுக்க ஆரம்பித்துவிட்டதாக நடிகர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2ஆம் தேதி சர்க்கார் ஆடியோ வெளியீட்டு விழா மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.அப்பொழுது ரசிகர்கள் மத்தியில் பேசிய விஜய், இந்த படத்தில் நான் முதல்வராக நடிக்கவில்லை, ஒருவேளை நான் முதல்வரானால் நடிக்க மாட்டேன். நாட்டில் ஊழலை ஒழிக்க முயற்சி செய்வேன் என தன் அரசியல் வருகைக்கு அஸ்திவாரம் போடும்வகையில் பேசினார்.

      karunakaran க்கான பட முடிவு

மேலும் விஜய் குட்டிக்கதை ஒன்றையும் கூறியுள்ளார்.இதனை விமர்சிக்கும் வகையில் நடிகர் கருணாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த  குட்டிக் கதை தலைவர்களுக்கு மட்டுமா அல்லது நடிகர்களுக்குமா? உங்களின் ரசிகர்களை கெட்ட வார்த்தைகள் பேசாமல் இருக்கச் சொல்லுங்கள் நண்பா நண்பி. நீங்கள் சொல்வதை அவர்கள் கேட்கிறார்களா என்று பாருங்கள். அவர்களை திட்டி, வெறுப்பை காட்ட வேண்டாம் என்று கூறுங்கள் பதிவிட்டுள்ளார் .

மேலும் மற்றொரு பதிவில் சமூகவலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் அசிங்கமாக பேசுவதாலேதான்  விஜயை வெறுக்கிறேன் எனவும் பதிவிட்டுள்ளார்.

இதனால் விஜய் ரசிகர்கள், சமூக வலைதளத்தில் கருணாஸை கடுமையாக திட்டி வருகிறார்கள். 


Advertisement