ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
சீரியல் நடிகைக்கு திருமணம்.! பிரபலங்கள் வாழ்த்து.!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் என்ற நெடுந்தொடரின் மூலமாக பிரபலமான பிரபல சின்னத்திரை நடிகை ஹர்திகாவுக்கு இன்று காலை திருமணம் முடிந்தது. சின்னத்திரை பிரபலங்களும், திரையுலக பிரபலங்களும், நடிகர், நடிகைகளும் மணமக்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
தற்சமயம் திருமண புகைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. அந்த புகைப்படங்களை நடிகை ஹர்திகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். செம்பருத்தி தொடரில் நடித்து வந்த கார்த்திக் ராஜ் திடீரென்று அந்த தொடரை விட்டு வெளியேறியிருந்தார். இதன் பிறகு கார்த்திகை தீபம் தொடர் மூலமாக மறுபடியும் ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு வந்தார். இந்த தொடரில் கார்த்திக்ராஜுக்கு ஜோடியாக தீபா என்ற கதாபாத்திரத்தில் ஹர்திகா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்திகை தீபம் தொடர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்ற நிலையில், அதன் கதாநாயகிக்கு தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது. மணமகன் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்தால், இவருடைய திருமணம் அவருடைய குடும்ப வழக்கப்படி நடைபெற்றதாக தெரிகிறது. இந்த நிலையில், ஹர்திகாவுக்கும், அவருடைய கணவருக்கும் சின்னத்திரை பிரபலங்களும், ரசிகர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.