சினிமா

கருவாப்பையா... நாயகி கார்த்திகாவா இது.! அவரோட தற்போதைய நிலையை பார்த்தீர்களா!! புகைப்படம் இதோ..

Summary:

karthika re entry to cinema now

தமிழ் சினிமாவில் கடந்த 2006 ஆண்டு வெளியான தூத்துக்குடி என்ற  படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கார்த்திகா. 

படம் ரசிகர்களையே பெருமளவில் வரவேற்பை பெறாத நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற கருவாப்பையா கருவாப்பையா  என்ற பாடல் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமாகி  ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் 0000 பிடித்தார். அதனை தொடர்ந்து அவர் பிறப்பு, ராமன் தேடிய சீதை, மதுரைசம்பவம், 365 காதல் கடிதம்,நாளைய பொழுதும் உன்னோடு போன்ற சில படங்களில் நடித்துள்ளார். 

அதனை தொடர்ந்து அவருக்கு சரியான படவாய்ப்புகள் கிடைக்காத நிலையில் அக்கா, தங்கையாக நடிக்கும் வாய்ப்புகளே கிடைத்துள்ளது.இந்நிலையில் சினிமாத்துறைக்கு முழுக்கு போட்ட அவர் தனது தங்கையின் படிப்பிற்காக அவருடன் மும்பை சென்றார். 

இந்நிலையில் தங்கையின் படிப்பு முடிந்து, கார்த்திகா மீண்டும் சென்னை திரும்பிய நிலையில் அவருக்கு தற்போது சில படங்களில் நடிக்க வாய்ப்பு வந்திருப்பதாகவும், விரைவில் சினிமாவில் நடிப்பார் எனவும் எதிர்பார்க்கபடுகிறது. மேலும் அக்கா, தங்கை போன்ற அனைத்து கதாபாத்திரத்திலும் கார்த்திகா நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் விரைவில் நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் தன்னை ரசிகர்கள் மீண்டும் பார்க்கலாம் என கார்த்திகா கூறியுள்ளார்..   

 


Advertisement