காலேஜ் படிக்கும்போது நடிகர் கார்த்தி தனது நண்பர்களுடன் எப்படி இருந்துள்ளார் பார்த்தீர்களா!! வேற லெவல் ஜாலிதான்!!

காலேஜ் படிக்கும்போது நடிகர் கார்த்தி தனது நண்பர்களுடன் எப்படி இருந்துள்ளார் பார்த்தீர்களா!! வேற லெவல் ஜாலிதான்!!


karthi-shares-his-college-and-bus-memories-with-friend

நடிகர் கார்த்தி தனது காலேஜ் லைப் அனுபவங்களை பகிர்ந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 தமிழ் சினிமாவில் பருத்திவீரன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் சினிமாதுறையில் அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. இவர் நடிகர் சிவக்குமாரின் மகன் மற்றும் நடிகர் சூர்யாவின் தம்பி ஆவார். அப்படத்தை தொடர்ந்து கார்த்தி பையா, ஆயிரத்தில் ஒருவன், சிறுத்தை, மெட்ராஸ், தீரன் அதிகாரம் ஒன்று, கைதி எனப் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர்  இறுதியாக தம்பி திரைப்படத்தில் நடித்திருந்தார். இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. 

இந்நிலையில் கார்த்தி தற்போது சுல்தான் மற்றும் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் வரலாற்று சிறப்புமிக்க பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துவருகிறார்.  இந்த நிலையில் கார்த்தி தற்போது தான் கல்லூரி படிக்கும் போது எடுத்த புகைப்படத்தை நீண்ட நாட்களுக்கு பிறகு இணையத்தில் பகிர்ந்துள்ளார்.


நடிகர் கார்த்தி சென்னையில் கிரசன்ட் கல்லூரியில் தான் பொறியியல் படிப்பு படித்தார். அதனைத் தொடர்ந்தே அவர் வெளிநாட்டில் படிக்கச் சென்றார். இந்த நிலையில் சென்னையில் படிக்கும்போது பல்லவன் பேருந்தில் தனது நண்பர்களுடன் எடுத்த புகைப்படத்தை நடிகர் கார்த்தி வெளியிட்டு, பல்லவன், சென்னை மக்களின் நம்பிக்கையான நண்பன். என்னுடைய கல்லூரி நாட்கள் அதிகம் செலவிட்டது இந்த பேருந்தில் தான் என மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.