வாவ்.. நல்லா வளந்துட்டாரே! முதன்முதலாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் கார்த்தி! குவியும் லைக்ஸ்கள்!

வாவ்.. நல்லா வளந்துட்டாரே! முதன்முதலாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் கார்த்தி! குவியும் லைக்ஸ்கள்!


karthi-shares-his-children-photo

தமிழ் சினிமாவில் தற்போதைய முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் நடிகர் கார்த்தி. தமிழ் சினிமாவில் பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர் இன்று ஏகப்பட்ட வெற்றிப்படங்களை கொடுத்து புகழின் உச்சத்தில் உள்ளார். இவர் பிரபல நடிகர் சிவகுமாரின் மகன் மற்றும் நடிகர் சூர்யாவின் தம்பியும் ஆவார்.

நடிகர் கார்த்தி கைவசம் தற்போது விருமன், மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் பொன்னியின் செல்வன், பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் சர்தார் போன்ற படங்கள் உள்ளன. நடிகர் கார்த்தி கடந்த 2011ஆம் ஆண்டு ரஞ்சனி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு உமையாள் என்ற அழகிய பெண் குழந்தை இருந்த நிலையில் கடந்த ஆண்டு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது. தனது மகனுக்கு கார்த்தி கந்தன் என பெயரிட்டுள்ளார். இந்த நிலையில் அவர் முதன்முதலாக தனது மகனது புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார். அதாவது தனது மகன் மற்றும் மகளுடன் நடந்து செல்வது போன்ற புகைப்படத்தை அவர் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.