முதன்முதலாக நடிகை ஜோதிகாவுடன் செல்பி எடுத்த பிரபல முன்னணி நடிகர்! யாருனு பார்த்தீர்களா! குவியும் லைக்குகள்! - TamilSpark
TamilSpark Logo
சினிமா

முதன்முதலாக நடிகை ஜோதிகாவுடன் செல்பி எடுத்த பிரபல முன்னணி நடிகர்! யாருனு பார்த்தீர்களா! குவியும் லைக்குகள்!

தமிழ் சினிமாவில் பல பிரபலங்களுடன்  இணைந்து நடித்து ஏராளமான வெற்றிப்படங்களை கொடுத்தவர் நடிகை ஜோதிகா. இவர் நடிகர் சூர்யாவின் மனைவியாவார். திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு இடைவெளி விட்டிருந்த ஜோதிகா மீண்டும்  36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி என கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

மேலும் சமீபத்தில் அவரது நடிப்பில் வெளிவந்த ராட்சசி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகை ஜோதிகா தனது மைத்துனரும், பிரபல நடிகருமான கார்த்திக்குடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தை திரிஷ்யம் மற்றும் பாபநாசம் பட புகழ் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு 96 படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வஸந்தா இசையமைக்கிறார்.

இந்நிலையில் தம்பி என பெயரிடப்பட்ட புதிய படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தம்பி படப்பிடிப்பில் கார்த்திக் நடிகர் சத்யராஜ், சீதா மற்றும் அவரது அண்ணி ஜோதிகாவுடன் செல்பி எடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo