சினிமா

கர்ணன் படத்தின் "கண்டா வரச்சொல்லுங்க" பாடல்.! உச்சகட்ட வியூஸ்.! பயங்கர எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!

Summary:

தனுஷ் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் கர்ணன் படத்தில் 'கண்டா வரச்சொல்லுங்க கர்ணன கைய

தனுஷ் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் கர்ணன் படத்தில் 'கண்டா வரச்சொல்லுங்க கர்ணன கையோடு கூட்டி வாருங்க' என்ற பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்பாடலை கிடக்குழி மாரியம்மாள் மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பாடியுள்ளனர். கிராமத்து வாசனை வீசும் வகையிலான இந்த பாடலுக்கு சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறு விறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், நாட்டுப்புற பாடகி கிடக்குழி மாரியம்மாள் உணர்ச்சிபூர்வமாக பாடிய "கண்டா வரச்சொல்லுங்க" என்ற பாடல் மிகவும் வித்தியாசமாக இருக்க ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.


இந்தநிலையில், 'கர்ணன்' படத்திலிருந்து வெளியாகியுள்ள "கண்டா வரச்சொல்லுங்க" பாடல் யூடியூபில் 6 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் புதிய போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. 4 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்தப் பாடலை லைக் செய்துள்ளார்கள் எனவும் அந்தப் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


Advertisement