சினிமா

மீண்டும் இரண்டாவது குழந்தைக்கு தாயான நடிகர் கரீனா கபூர்! என்ன குழந்தை தெரியுமா?

Summary:

பாலிவுட்டில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நாயகியாக கொடிகட்டி பறந்தவர் நடிகை கரீ

பாலிவுட்டில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நாயகியாக கொடிகட்டி பறந்தவர் நடிகை கரீனா கபூர். இவர் பல மாஸ் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து எக்கச்சக்கமான படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் சயீப் அலிகானை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 

இவர்களுக்கு 2016 ஆம் ஆண்டு தைமூர் அலி கான் என்ற ஆண் குழந்தை பிறந்தது. அதனைத் தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்த கரீனா கபூர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாங்கள் இரண்டாவது குழந்தையை எதிர் பார்த்துக் கொண்டிருப்பதாக அறிவித்திருந்தனர்.

kareena kapoorக்கான பட முடிவுகள்

இந்த நிலையில் கரீனா கபூருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், அவர் 
மும்பையில் உள்ள பிரீச் கேண்டி என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் கரீனா கபூர் குழந்தையுடன் இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதனை ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 


Advertisement