சொத்துக்காக 60 வயது நடிகரை இரண்டாவது திருமணம் செய்த பிரபல நடிகை.!? புலம்பி தள்ளும் முன்னாள் கணவர்..Kannada actress going to get married to Telugu actor

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவரது உறவினரான நரேஷ் பாபுவும் தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகராக இருந்து வருகிறார். நரேஷ் பாபு தெலுங்கு மட்டுமல்லாது ஹிந்தி, தமிழ் போன்ற மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்துள்ளார். குறிப்பாக தமிழில் இவர் நடிப்பில் வெளியான பொருத்தம், நெஞ்சத்தை அள்ளித்தா போன்ற திரைப்படங்களில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவ்வாறு சினிமாவில் உச்சத்தில் இருந்த நரேஷ் பாபு, முதன்முதலாக நடன கலைஞர் ஶ்ரீனு என்பவரின் மகளை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தந்தையானார். ஆனால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து ஆனது. இதன் பின்னர், ரேகா சுப்ரியா, ரம்யா ரகுபதி என்ற பெண்களை அடுத்தடுத்து திருமணம் செய்து கொண்டு கருத்து வேறுபாட்டால் விவாகரத்தும் செய்து விட்டார்.

telungu

இதனை அடுத்து 60 வயதை கடந்த நரேஷ் பாபு, கன்னட நடிகையான பவித்ரா லோகேஷ் என்பவரை காதலிப்பதாக அறிவித்திருந்தார். மேலும் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருவரும் சில மாதங்களாக இருந்து வருகின்றனர். விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வேகமாக பரவி வருகிறது.

இதுபோன்ற நிலையில் கன்னட நடிகை பவித்ரா லோகேஷின், முன்னாள் கணவர் சமீபத்தில் தனியார் ஊடகத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதாவது, "பவித்ரா லோகேஷ் சொத்துக்காக என்னை கூலிப்படை வைத்து கொலை செய்ய முயற்சி செய்தார். இப்போது நரேஷ் பாபுவை திருமணம் செய்யப் போவதும் 1500 கோடி சொத்துக்காக தான். பவித்ரா லோகேஷ் எப்போதும் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படுபவர். அதனாலயே இந்த திருமணம் நடக்கப் போகிறது" என்று பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.