வசூலில் மிரட்டும் காஞ்சனா-3; வெளியான நான்கே நாட்களில் இவ்ளோ வசூலா செம.!

வசூலில் மிரட்டும் காஞ்சனா-3; வெளியான நான்கே நாட்களில் இவ்ளோ வசூலா செம.!


kanchana3 - tamil movie - release 4 days - 60 crores collection

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராகவும், சிறந்த இயக்குனராகவும் இருந்து ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் நடிகர் ராகவா லாரன்ஸ். இவரது இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் 'முனி'. இதன் இரண்டாம் பாகம் 'காஞ்சனா' என்ற பெயரில் வெளிவந்தது. அதனை தொடர்ந்து காஞ்சனா-2  வெளியானது. இவை அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

Kanchana 3

இந்நிலையில் தற்போது காஞ்சனா படத்தின் 3-ம் பாகம் வெளிவந்துள்ளது. ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்துள்ள இந்தப் படத்தை ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் லாரன்ஸே தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஓவியா மற்றும் வேதிகா நடித்துள்ளனர். மேலும் கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஆக்ஷன், த்ரில்லர், காமெடி கலந்த கலவையாக இப்படம் உருவாகியுள்ளதால் சிறுவர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் வெளியான நான்கே நாட்களில் 60 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.