பிரபல பிக்பாஸ் நடிகை ஜெயஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை... அதிர்ச்சியில் ரசிகர்கள்..

பிரபல பிக்பாஸ் நடிகை ஜெயஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை... அதிர்ச்சியில் ரசிகர்கள்..


kanada-bigg-boss-contestant-jaya-sree-ramaiah-commit-su

பிரபல பிக்பாஸ் நடிகை ஜெயஸ்ரீ ராமையா மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட மொழியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் மூன்றில் கலந்துகொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானவர் நடிகை ஜெயஸ்ரீ ராமையா. இவர் கடும் மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டிருந்தநிலையில், அதற்காக பெங்களூரு சந்தியா கிரானா ஆஷ்ரமத்தில் சிகிச்சை மேற்கொண்டுவந்துள்ளார்.

இந்நிலையில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அவரை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சித்தபோது அவரை தொடர்புகொள்ளமுடியவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள், இதுகுறித்து ஆஷ்ரம நிர்வாகிகளிடம் தொடர்புகொண்டு தெரிவித்தபோது, அவர்கள் ஜெயஸ்ரீ ராமையாவின் அறைக்கு சென்று பார்த்துள்ளனர்.

dead

அப்போது அவர் மினி விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டநிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனை அடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டநிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் ஜெயஸ்ரீ ராமையாவின் தற்கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரித்துவருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பலருக்கும் பட வாய்ப்புகள் அமைத்துவரும் நிலையில், தனக்கு ஒரு படத்தில் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை என விரக்தியடைந்து தனது நண்பர்களிடம் அவர் கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் கடும் மன அழுத்தம் ஏற்பட்டு அவர் அதற்காக சிகிச்சை பெற்றுவந்தநிலையில் தற்போது தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.