என் மனைவியை விவாகரத்து செய்துவிடேன்..! சோகமாக அறிவித்த விஜய் டிவி சீரியல் நடிகர்..!
என் மனைவியை விவாகரத்து செய்துவிடேன்..! சோகமாக அறிவித்த விஜய் டிவி சீரியல் நடிகர்..!

விஜய் தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பான கனா காணும் தொடரின் மூலம் பிரபலமானவா் யுதன் பாலாஜி. பாலாஜி உடன்பட இந்த தொடரில் நடித்த பல நட்சத்திரங்கள் இன்று சின்னத்திரை, வெள்ளித்திரையில் பிரபலமடைந்துள்ளனா்.
இந்த தொடரில் நடித்த யுதன் பாலாஜி சினிமாவில் பட்டாளம், நகர்வலம், காதல் சொல்ல வந்தேன் போன்ற படங்களில் நடித்தார். இதனை தொடர்ந்து பாலாஜி கடந்த 2016-ல் ப்ரீத்தி என்பவரை திருமணம் செய்தார். இவா்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி மனஸ்தாபங்கள் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு காதலர் தினத்தில் தனது காதல் மனைவி ப்ரீத்தியை அதிகாரபூர்வமாக பிரிவதாக பாலாஜி அறிவித்தார். பல ரசிகர்களின் பேவரைட் ஹீரோவான பாலாஜியின் இந்த திடீர் முடிவு பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.