தமிழகம் சினிமா

எஸ்.பி.பி உடல்நிலை கவலைக்கிடம்.! விறுவிறுவென மருத்துவமனைக்கு விரைந்த கமல்ஹாசன்.! கமல் தெரிவித்த தகவல்!

Summary:

kamalhasan go to hospital for meet SPB

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் கடந்த மாதம் 5ம் தேதி சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அதனை தொடந்து அவரது உடல்நிலை மோசமான நிலையில் செயற்கை சுவாச கருவிகள் மற்றும் எக்மோ உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. 

பின்னர் நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக எஸ்.பி.பியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.  அதனை தொடர்ந்து அவர் பேச தொடங்கியுள்ளார். இதனையடுத்து அவரது மகன் எஸ்.பி.பி சரண் கூறுகையில் தனது அப்பாவிற்கு சுயநினைவு திரும்பிவிட்டது. உணவு எடுத்துக் கொள்கிறார் என தெரிவித்தார். ஆனால் நேற்று திடீரென பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை  மோசமாகி மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும், அதிகபட்ச உயிர்காக்கும் மருத்துவ கருவிகளின் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

எஸ்.பி.பி உடல்நிலை தொடர்பான தகவல் வெளிவந்ததும் அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு நடிகர் கமல்ஹாசன் நேற்று இரவு 8 மணியளவில் சென்றுள்ளார். அங்குள்ள அவரது மகன் எஸ்.பி. சரணிடம் அவரது தந்தையின் உடல்நிலைமை குறித்து அவர் கேட்டறிந்தார். 20 நிமிடங்கள் அங்கிருந்த அவர் பிறகு மருத்துவமனையில் இருந்து புறப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், எஸ்.பி.பி உடல்நிலை நலமுடன் இருக்கிறார் என கூறமுடியாது. அவர் கவலைக்கிடமாக இருக்கும் நிலையில் அவருக்கு அதிகபட்ச உயிர்காக்கும் மருத்துவ கருவிகளின் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.


Advertisement