சினிமா

இது நமது கடமை மட்டுமல்ல, பெருமையும் கூட! நெகிழ்ச்சியுடன் வாழ்த்து கூறிய நடிகர் கமல்! யாருக்கு தெரியுமா?

Summary:

Kamal wishes tweet to linen workers

கைத்தறி தொழிலை காப்பது நமது கடமை மட்டுமல்ல பெருமையும் கூட என பிரபல முன்னணி நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

சமீபத்தில் தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் நெசவாளி தொழிலாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிட்டு வந்தனர்.

இந்நிலையில் கைத்தறி நெசவாளர்களுக்கு வாழ்த்துக் கூறிய மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன், கைத்தறிகள் நம் கிராமப் பொருளாதாரத்தின் பெரும் தூண். கைகளில் வண்ணம் செய்யும் அவர்களை, கைவிடாது காத்தல் நம் கடமை மட்டுமல்ல, பெருமையும் கூட. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், கைத்தறி பொருட்களை பயன்படுத்துதல் தான் அக்கலை காக்கப்பட இந்த தேசிய கைத்தறி தினத்தில் நம் கடமை. நாமே தீர்வு என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 


Advertisement