சினிமா

கமலின் 'ராஜபார்வை' மீண்டும் புதிய உதயமாகிறது.

Summary:

kamal permision in rajaparvai

நடிகை வரலட்சுமி,  நடிகரும், பத்திரிகையாளரும், அரசியல்வாதியுமான நடிகர் சரத்குமாரின் மகள் ஆவார். இவர் நடிகர் சிலம்பரசனுடன் இணைந்து 'போடா போடி' என்ற திரைப்படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். மேலும் டைரக்டர் பாலா இயக்கத்தில் உருவாகியிருந்த  'தாரை தப்பட்டை' என்ற  படத்தில் நடிகர் சசிகுமார் உடன் இணைந்து நடித்தார். இதன் மூலம் மக்கள் மத்தியில் அவர் நடிப்பு பரவலாக பேசப்பட்டது.

மற்ற கதாநாயகிகளைப் போல் அல்லாமல் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிப்பதில் ஆர்வமாக உள்ளார். அதனைத் தொடர்ந்து தற்போது ஜே.கே இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஒரு பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார்.

Image result for raja paarvai movie

இதனால் இந்த படத்திற்கு 'ராஜபார்வை' என்ற தலைப்பு சரியாக இருக்கும் என்று படக்குழுவினர் முடிவு செய்தனர். ஆனால் ராஜபார்வை என்பது நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியிருந்த  படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் நடிகர் கமல்ஹாசனிடம் அனுமதி கோரியிருந்தனர்.

இந்த கதைக்கு ஏற்ற தலைப்பாக இருப்பதால் நடிகர் கமல்ஹாசனும் தற்போது அனுமதி அளித்துள்ளார். கதாநாயகியாக மட்டுமே நடிப்பேன் என்றில்லாமல் இவ்வாறான துணிச்சலான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதால் தமிழ் சினிமாவில் தற்போது விஜய் சேதுபதிக்கு இணையாக படவாய்ப்புகளை பெற்றுள்ளார் நடிகை வரலட்சுமி சரத்குமார்.
 


Advertisement