சினிமா

காக்கா முட்டை படத்தில் நடித்த குட்டி பசங்களா இது.. இப்படி மாறிட்டாங்களே.. வைரலாகும் வீடியோ.!

Summary:

காக்கா முட்டை திரைப்படம் வெளியாகி ஆறு வருடங்கள் நிறைவு பெற்றதை கொண்டாடும் விதமாக அந்த படத்

காக்கா முட்டை திரைப்படம் வெளியாகி ஆறு வருடங்கள் நிறைவு பெற்றதை கொண்டாடும் விதமாக அந்த படத்தில் குழந்தைகளாக நடித்த சிறுவர்களுடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் லைவ் நடத்தியுள்ளார்.

இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான படம் தான் காக்கா முட்டை. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், விக்னேஷ், ரமேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது

மேலும் இரண்டு தேசிய விருதுகளையும் இப்படம் பெற்றுள்ளது. இப்படம் வெளியாகி ஆறு வருடங்கள் நிறைவு பெற்றதை கொண்டாடும் விதமாக ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை படத்தில் நடித்த சிறுவர்களுடன் லைவ் வந்துள்ளார். அதில் இப்படம் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பேசியுள்ளார். குறித்த சிறுவர்களும் மிகப்பெரிய பையனாக வளர்ந்ததுடன் தற்போது சினிமாவில் நடித்தும் வருகின்றனர்.


Advertisement