2 மாசம்.. திருமணத்திற்கு முன் கஜோல் போட்ட கண்டிஷன்.! முடியாமல் ஹனிமூனிலிருந்து ஓடிவந்த நடிகர்!!Kajol condition about honeymoon to husband

தமிழ் சினிமாவில் மின்சார கனவு என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளைக்கொண்டவர் நடிகை கஜோல். இப்படத்தில் பிரபுதேவா மற்றும் அரவிந்த சாமியுடன் இணைந்து அவர் நடித்திருந்தார். தொடர்ந்து நடிகை கஜோல் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் வில்லியாக நடித்திருந்தார். 

பாலிவுட் நடிகருடன் திருமணம் 

பாலிவுட்டில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த அவர் 1999 ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். அவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகள் உள்ளனர். அவர் தற்போதும் படங்கள் வெப் தொடர்கள் என பிசியாக இருந்து வருகிறார். 

இதையும் படிங்க: இரண்டாவது திருமணத்தை முடித்த பிக்பாஸ் அபிஷேக் ராஜா.! பொண்ணு யார் தெரியுமா?? வைரல் புகைப்படங்கள்!!

kajol

திருமணத்திற்கு முன் கண்டிஷன் 

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில்  கஜோல் கூறியதாவது, திருமணத்திற்கு முன்பு அஜய் தேவ்கனுக்கு ஒரு கண்டிஷன் போட்டிருந்தேன். இரண்டு மாதங்கள் ஹனிமூனுக்காக வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும், அதற்கு ஓகே என்றால் மட்டுமே திருமணத்திற்கு சம்மதிப்பேன் என்று கூறினேன். அவரும் சம்மதம் தெரிவித்தார்.

பாதியிலேயே வந்த கணவர் 

திருமணத்திற்கு பின்பு தேனிலவுக்காக ஒவ்வொரு நாடாக சென்ற நிலையில் அஜய் தேவ்கனால் முடியவில்லை. உடம்பு சரியில்லாமல் சென்றது. பின்னர் வீட்டிற்கு செல்ல வேண்டும் என அடம்பிடித்து அங்கிருந்து கிளம்பிவிட்டார் என்று கஜோல் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ இதுதான் காரணம்.! ஒப்பனாக போட்டுடைத்த நடிகை கோவை சரளா.!