கோடியில் வாழ்க்கை வாழும் தல அஜித்தின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா?
பிக்பாஸ் வின்னர் இவர்தான்.! அதிரடியாக பதிலளித்த பிரபல நடிகை!! யார் தெரியுமா?

பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார்.
முதல் பிக்பாஸ் சீசன் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் கடந்த ஆண்டு நடைபெற்ற இரண்டாவது சீசன் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. எனவே இந்த சீனில் அனைத்து விஷயங்களையும் மிகவும் உன்னிப்பாக கவனித்து செய்துள்ளது பிக்பாஸ் குழு.
இதனைத்தொடர்ந்து 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் பாத்திமா பாபு எலிமினேட் செய்யபட்டப்பட்டார். மேலும் இந்த வார எலிமினேஷன் பட்டியலில் வனிதா விஜயகுமார், மீரா மிதுன், மோகன் வைத்யா, சரவணன்,மதுமிதா ஆகியோர் பெயர் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் பிக்பாஸ் குறித்து நடிகையும், நடன இயக்குநர் சாண்டியின் முன்னாள் மனைவியுமான காஜல் பசுபதி ஊடகம் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டியளித்துள்ளார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாராவார்.
அப்பொழுது அவர் கூறியதாவது, பிக்பாஸ் வீட்டில் அனைவரிடமும் சண்டை போட்டு எப்பொழுதும் பிரச்னைகளுக்கு காரணமாக இருப்பவர் வனிதாதான். லாஸ்லியா தனியாக திட்டமிட்டு விளையாடுவது போல உள்ளது. சாண்டியாக இருந்தாலும், லாஸ்லியா, தர்ஷனாக இருந்தாலும் ஒரு விஷயம் தவறு என்று தெரிந்தால் அதுகுறித்து உடனே அந்த இடத்திலேயே பேசி கருத்து தெரிவித்தால் மிக நன்றாக இருக்கும்.
மேலும் எப்பொழுதுமே பிக்பாஸ் வீட்டில் ஆல்இன்ஆல் அழகு ராணியாக இருப்பது லாஸ்லியா தான். மேலும் பிக்பாஸ் சீசன் 3 டைட்டிலை சாண்டிதான் ஜெயிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” எனவும் கூறியுள்ளார்.