சினிமா

என்னது, காஜலை திருமணம் செய்றதுக்கு இந்த தகுதி மட்டும் போதுமா? அப்போ நீங்க ரெடியா?

Summary:

kajal agarwal said about the qualification to marry her

தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். பல பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த அவருக்கு தற்போது வாய்ப்புகள் குறைந்துள்ளன. மேலும் தற்போதுதான் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளார்.

இந்நிலையில் காஜல்அகர்வால் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.அப்பொழுது அவர்,
“ஒவ்வொரு படத்துக்கும் நான் கடினமாக உழைக்கிறேன். பலனை காலத்திடம் விட்டுவிட்டேன், கதை பிடித்தால் இளம் நடிகர்கள் புதிய இயக்குனர்கள் படங்களிலும் நடிப்பேன். 

மேலும் என் திருமணம் பற்றி அனைவரும் கேட்கிறார்கள். ஆனால் எனக்கு இப்போது திருமண செய்யும் எண்ணம்  இல்லை.மேலும் எனக்கு கணவராக வருபவருக்கு சில தகுதிகள் இருக்க வேண்டும். என்னிடம் உண்மையாக இருக்க வேண்டும். என்னை உண்மையாக நேசிக்க வேண்டும். கண்மூடித்தனமாக என்னை நம்ப வேண்டும்.

அவர் எனக்குதான் முதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வீட்டு வேலையில் எனக்கு உதவி செய்ய வேண்டும். என்னை எப்போதும் சிரிக்க வைக்க வேண்டும்" என காஜல் அகர்வால் கூறியுள்ளார்.


Advertisement