காஜலை மேடையில் கட்டியணைத்து முத்தம் கொடுத்த ஒளிப்பதிவாளர்; ரசிகர்கள் முகம் சுளிக்கும் வீடியோ காட்சி.!

காஜலை மேடையில் கட்டியணைத்து முத்தம் கொடுத்த ஒளிப்பதிவாளர்; ரசிகர்கள் முகம் சுளிக்கும் வீடியோ காட்சி.!


kajal-agarval---kavasam---thelungu-movie

கவசம் என்ற தெலுங்கு படத்தின் டீஸர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகை காஜல் அகர்வாலை படத்தின் ஒளிப்பதிவாளர் திடீரென கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பவர் நடிகை காஜல் அகர்வால். அவர் தற்சமயம் தெலுங்கில் கவசம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் அப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது.

Tamil Spark

படத்தில் நடித்துள்ள நடிகர் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ், காஜல் அகர்வால் மற்றும் மெஹ்ரின் பிர்ஸாடா ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில் காஜல் பேசும்பொழுது படப்பிடிப்பின்போது தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

அப்பொழுது ஒளிப்பதிவாளர் சோட்டா கே நாயுடுவுடன் தான் பழகிய தருணங்களை நினைவுகூர்ந்து பேசிக்கொண்டிருந்தார். இந்த நிலையில் அருகில் நின்று கொண்டிருந்த ஒளிப்பதிவாளர் அவரை கட்டியணைத்து முத்தம் கொடுத்தார்.

இதனை எதிர்பாராத காஜல் அதனை சமாளித்தவாறு தொடர்ந்து பேசியபடி உள்ளார். ஒளிப்பதிவாளர் நாயுடுவின் இந்த செயலை சமூகவலைதளங்களில் காஜல் ரசிகர்கள் வறுத்து எடுத்து வருகிறார்கள்.