நடிகர் கருணாகரனுக்கு என்னாச்சு! தீயாய் பரவும் புகைப்படம்! அதிர்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள்!

நடிகர் கருணாகரனுக்கு என்னாச்சு! தீயாய் பரவும் புகைப்படம்! அதிர்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள்!


Kaeunakaran got surgery in legs

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர  கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகர் கருணாகரன். இவர் பீட்சா, சூதுகவ்வும், ஜிகர்தண்டா, லிங்கா, இன்று நேற்று நாளை' உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 

மேலும் தற்போது சிம்பு நடிப்பில் உருவாகும் மாநாடு,  சிவகார்த்திகேயனின் அயலான், யோகி பாபுவுடன் பன்னி குட்டி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது அவரது காலில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

surgery

இதுகுறித்து நடிகர் கருணாகரன் கூறுகையில், பீட்சா, சூதுகவ்வும் படங்களில் நடித்த போதே காலில் அடிப்பட்டது. அப்போது பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. லாக்டவுனிற்கு முன்பாக நடைபெற்ற மாநாடு பட படப்பிடிப்பில் மீண்டும் காலில் அடிப்பட்டு கடுமையான வலி ஏற்பட்டது.

பின்னர் ஸ்கேன் செய்து பார்த்ததில் ஏசிஎல் எனப்படும்  மூட்டு கிழிந்தித்திருப்பது கண்டறியப்பட்டு,  காலில் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இன்னும் இரு வாரங்களில் நலமாகி வீடு திரும்பிவிடுவேன் என கூறியுள்ளார்.