'45' வயசிலும் தலைகீழாக நிற்கும் ஜோதிகா... வைரல் வீடியோ.!

'45' வயசிலும் தலைகீழாக நிற்கும் ஜோதிகா... வைரல் வீடியோ.!


jyothika-follows-her-husband-surya-foot-steps-to-stay-f

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா. வாலி திரைப்படத்தின் மூலம்  தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் நடித்த குஷி  திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட  தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களுடனும்  திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிகர் சூர்யாவை காதலித்து 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

surya

திருமணத்திற்கு பின் நடிப்பிற்கு ஓய்வு கொடுத்திருந்த ஜோதிகா சமீபகாலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்  திரைப்படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். தற்போது இவர் கணவர் சூர்யா மற்றும் குழந்தைகளுடன் மும்பையில் சென்று செட்டிலாகி இருக்கிறார். அங்கேயே தொழிலிலும் முதலீடு செய்து இருக்கிறார்கள்.

மும்பையில் சென்று செட்டிலான ஜோதிகா தீவிரமாக உடற்பயிற்சி செய்து  தனது உடலை பிட்டாக வைத்திருக்கிறார். சமீபத்தில் வெளியான இவரது வீடியோ ஒன்று  இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் வைரலானது. அதில் கடினமான உடற்பயிற்சிகளை  விடாமுயற்சியுடன் ஜோதிகா செய்து கொண்டிருக்கிறார். கணவரைப் போலவே மனைவியும்  உடற்பயிற்சியின் மூலம் பிட்டாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.