சினிமா

பிறந்தநாளில் சர்ப்ரைஸ் கொடுத்த காதலி! செம உற்சாகத்தில் நடிகர் விஷ்ணு விஷால்! வைரலாகும் புகைப்படம்!

Summary:

Jwala gutta gave surprise to Vishnu vishal birthday

தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் விஷ்ணு விஷால். அதனைத் தொடர்ந்து அவர் நீர்ப்பறவை,  முண்டாசுப்பட்டி,  ஜீவா,  இன்று நேற்று நாளை, ராட்சசன் உள்ளிட்ட பல படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். மேலும் அவர் இறுதியாக சிலுக்குவார்பட்டி சிங்கம் என்ற படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது பல படங்கள் அவரது கைவசம் உள்ளது. 

நடிகர் விஷ்ணு விஷால் ரஜினி நட்ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆர்யான் என்ற மகன் உள்ள நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்தனர். அதனைத் தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் பிரபல பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா குட்டாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் அவர்கள் இருவரும் காதலிப்பதாகவும்,  விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

View this post on Instagram

My bday suprise...😁 @gutta_jwala

A post shared by vishnu vishal (@iamvishnuuvishal) on

இந்நிலையில் கொரோனாவால் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு வீட்டில் முடங்கியிருக்கும் நிலையில், சமீபத்தில் நடிகர் விஷ்ணு விஷால் தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அப்பொழுது, அவருக்கு ஜுவாலா குட்டா சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தியுள்ளார். இந்த நிகழ்வை விஷ்ணு விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் மிகவும் உற்சாகத்துடன் பகிர்ந்துள்ளார். இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.


Advertisement