சினிமா

நடிகர் விஷ்ணு விஷாலின் இரண்டாவது மனைவி ஏற்கனவே திருமணமானவரா? அவரது முதல் கணவர் யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்!!

Summary:

பிரபல நடிகரான விஷ்ணுவிஷால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கே.நட்ராஜின் மகள் ரஜி

பிரபல நடிகரான விஷ்ணுவிஷால் 
கடந்த சில வருடங்களுக்கு முன்பு கே.நட்ராஜின் மகள் ரஜினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஆர்யன் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2017ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்த நிலையில் சில காலங்களுக்கு  பின் விஷ்ணுவிஷால் பேட்மின்டன் வீராங்கனையான ஜூவாலா குட்டா என்பவரை காதலிப்பதாக தெரிவித்தார். மேலும் இருவரும் ஒன்றாக, நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் வெளியானது.

அதனைத் தொடர்ந்து விஷ்ணு விஷால் மற்றும் ஜுவாலா குட்டா இருவரும் கடந்த 22 ஆம் தேதி கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இது விஷ்ணு விஷாலுக்கு மட்டுமின்றி ஜுவாலா குட்டாவிற்கும் இரண்டாவது திருமணமாம். இவருக்கும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றுள்ளார்.

ஜுவாலா குட்டா கடந்த 2005 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி பேட்மிட்டன் வீரனான சேத்தன் ஆனந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இருவரும் ஆறு ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் 2011 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர். இந்த நிலையில் ஜுவாலா குட்டா தனது முதல் கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 


Advertisement