ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மூன்றாம் இடத்தினை பெற்ற பூவையாருக்கு எவ்வளவு பரிசு தெரியுமா?

ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மூன்றாம் இடத்தினை பெற்ற பூவையாருக்கு எவ்வளவு பரிசு தெரியுமா?



junior super singer poovaiyar price


தமிழ் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி விஜய் டிவி. புது புது நிகழ்ச்சிகள், தொடர்கள் என தினம் தினம் புது புது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது விஜய் தொலைக்காட்சி. அதேபோல விஜய் தொலைக்காட்சியில் பங்கேற்கும் பிரபலங்களையும் உலகறிய செய்வதில் விஜய் தொலைக்காட்சி முன்னோடியாக திகழ்கிறது.

சிவகார்த்திகேயன், சந்தானம், ரோபோ சங்கர் என தமிழ் சினிமாவின் பிரபலங்கள் பலரும் விஜய் தொலைக்காட்சியில் இருந்து சினிமாவிற்குள் வந்தவர்கள்தான். கலக்கப்போவது யாரு, பிக் பாஸ், சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் போன்ற நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளது.

super singer

அந்தவகையில் சூப்பர் சிங்கர் ஜூனியருக்கான சீசன் ஆறு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்ட குழந்தைகளில் நாட்டுப்புற பாடல்களை பாடி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார் பூவையார்.

இந்தநிலையில் ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மூன்றாம் இடத்தினை பெற்ற பூவையாருக்கு 10 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டுள்ளது.