இதுதான் என்னுடைய கொள்கை.! அரசியல் என்ட்ரி குறித்து செம தெளிவாக நடிகர் ராகவா எடுத்துள்ள முடிவு!!
பாலிவுட் மேக்கப்மேன்! ரஷ்யன் ஹேர்ஸ்டைல்... செம ஸ்டைலாக மாறி அசத்தும் பிக்பாஸ் ஜூலி! எப்படியிருக்கிறார் பார்த்தீர்களா!
பாலிவுட் மேக்கப்மேன்! ரஷ்யன் ஹேர்ஸ்டைல்... செம ஸ்டைலாக மாறி அசத்தும் பிக்பாஸ் ஜூலி! எப்படியிருக்கிறார் பார்த்தீர்களா!
தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் தமிழ்மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கிடைத்த புகழை வைத்து, அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் ஒன்றில் கலந்துகொண்டார்.
ஆரம்பத்தில் ரசிகர்களின் ஆதரவுடன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற இவர் அங்கு செய்த சில மோசமான நடவடிக்கைகளால் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதிக்க ஆரம்பித்தார். அன்றிலிருந்து இன்றுவரை நெட்டிசன்கள் அவர் என்ன செய்தாலும் மோசமாக கலாய்த்து வருகின்றனர்.
ஆனால் அதனை சிறுதும் பொருட்படுத்தாத ஜூலி, தொலைக்காட்சி நிகழ்ச்சி, படங்கள், விளம்பரங்கள் என பிஸியாக உள்ளார். மேலும் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் அவர் தற்போது பாலிவுட் மேக்கப்மேன் உதவியுடன், ரஷ்யன் ஹேர்ஸ்டைலில் செம மாடர்னாக போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அந்தப் புகைப்படங்கள் வைரலாகி ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது.