வில்லனாக கலக்கவிருக்கும் நடிகர் ஜித்தன் ரமேஷ்...! ரசிகர்கள் மகிழ்ச்சி...!
வில்லனாக கலக்கவிருக்கும் நடிகர் ஜித்தன் ரமேஷ்...! ரசிகர்கள் மகிழ்ச்சி...!
தமிழில் ஓரிரு படங்கள் நடித்தாலும் மற்ற மொழிகளில் பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ள ஜித்தன் ரமேஷ். தற்போது முதல் முறையாக வில்லனாக நடிக்கிறார்...
இவர் வில்லனாக நடிக்கும் இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லையாம். இந்த படத்தை யஷ்வந்த் கிரியேஷன் சார்பில் ரவி சவுத்ரி, நாகார்ஜுனா தயாரிக்கின்றனர்.
இந்த படத்தின் கதாபாத்திரங்கள் அனைத்தும் வித்தியாசமாக இருக்கும் என சினிமா வட்டாரம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதில் ஹீரோவாக சாய் மற்றும் அவருக்கு ஜோடியாக வங்காளத்தை சேர்ந்த ஈனாவும் நடிக்கிறார்கள். மேலும் ஒளிப்பதிவு ரவி, இசை ஆனந்த், இயக்கம் வம்சி கிருஷ்ணா மல்லா..
இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் சிகப்பு ரோஜாக்கள் படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்தது போல இருக்கும் என ஜித்தன் ரமேஷ் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது...
Tamil Spark