ஏதோ என்னால முடிஞ்சது... நடிகர் ஜித்தன் ரமேஷ் செய்த மாஸான காரியம்! பாராட்டும் ரசிகர்கள்!!

ஏதோ என்னால முடிஞ்சது... நடிகர் ஜித்தன் ரமேஷ் செய்த மாஸான காரியம்! பாராட்டும் ரசிகர்கள்!!


jithan ramesh help police and roadside poor people

தமிழ் சினிமாவில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த ஜித்தன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் ரமேஷ். இப்படத்தில் அவருக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அவர் ஜித்தன் ரமேஷ் என அழைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஜித்தன் ரமேஷ் 10ற்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால் அவை எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைப் பெறவில்லை. 

இந்த நிலையில் ஜித்தன் ரமேஷ் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். மேலும் அவர் விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

 இந்த நிலையில் நடிகர் ஜித்தன் ரமேஷ் கொரோனா காலத்திலும் அசராமல் பணியாற்றிவரும் காவல் துறை ஊழியர்களுக்கும், சாலையோரம் வாழும் ஏழை மக்களுக்கும் உணவுப் பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள், மாஸ்க், சானிடைசர் போன்றவற்றை வழங்கியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘ஏதோ என்னால் முடிந்தது. நீங்களும் வாருங்கள். இந்த தொற்றுநோயை ஒன்றாக வெல்லலாம்’ என பதிவிட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.