#CiniBreaking: விரைவில் ஜிகர்தண்டா 2-ம் பாகம்... கார்த்திக் சுப்புராஜ் அதிகாரபூர்வ அறிவிப்பு.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.! வைரலாகும் வீடியோ.!!

#CiniBreaking: விரைவில் ஜிகர்தண்டா 2-ம் பாகம்... கார்த்திக் சுப்புராஜ் அதிகாரபூர்வ அறிவிப்பு.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.! வைரலாகும் வீடியோ.!!



jigardhanda 2 coming soon

ஜிகர்தண்டா படத்தின் 2-ம் பாகம் விரைவில் வெளியாகலாம் என படத்தின் இயக்குனர் ட்விட்டரில் வீடியோ வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர்கள் சித்தார்த், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நடிகை லட்சுமி மேனன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா. இந்த படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவம், விமர்சன ரீதியாகவம் பாராட்டுகளை குவித்தது. 

cinema

இந்த படத்திற்கு பின்னர் கார்த்திக் சுப்புராஜுக்கு கிடைத்த வரவேற்பு அதிகரிக்கவே, தரமான திரைப்படங்களை ரசிகர்களுக்கு வழங்கியிருந்தார். நடிகர் ரஜினிகாந்தை வைத்து பேட்ட திரைப்படத்தை இயக்கி ரஜினி ரசிகராக புகழுச்சிக்கு சென்றார். 

cinema

இந்த நிலையில், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஜிகர்தண்டா படத்தின் 2-ம் பாகத்தை இயக்க இருப்பதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் கார்த்திக் சுப்புராஜின் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ளனர். 

cinema

இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், ஜிகர்தண்டா படம் ரிலீஸ் ஆகி 8 வருடங்கள் ஆகிவிட்டன. இது ஜிகர்தண்டா 2-ம் பாகத்திற்கான நேரம் என்பதை போல் காணொளி பதிவிட்டு இருக்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. விரைவில் படத்தின் நடிகர், நடிகைகள் தொடர்பான தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கபடுகிறது.