நான்கு ஆண்டுகளுக்கு பிறகு நான் அவனில்லை ஹீரோ ஜீவனின் புதிய அவதாரம் ! லேட்டஸ்ட் அப்டேட்!

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு நான் அவனில்லை ஹீரோ ஜீவனின் புதிய அவதாரம் ! லேட்டஸ்ட் அப்டேட்!


jeevan-aasariri

யுனிவர்சிட்டி படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜீவன். அதன் பிறகு அவர் காக்க காக்க படத்தில் வில்லனாக  நடித்ததன் மூலம்  மிகபெரிய பிரபலமானார் . தொடர்ந்து அவர் நடித்த திருட்டுப்பயலே, நான் அவனில்லை படங்கள் வெற்றி படமாக அமைந்தது.

தொடர்ந்து வெற்றி படங்களை தந்த ஜீவனுக்கு அதன் பிறகு வந்த  படங்களான  மச்சக்காரன், தோட்டா, நான் அவனில்லை 2, அதிபர் படங்கள் தோல்வி படங்களாக அமைந்தன. அவர் நடித்த கிருஷ்ணலீலை, ஜெயிக்கிற குதிர படங்கள் வெளிவரவில்லை.

jeevan

இந்த நிலையில் ஜீவன் 4 ஆண்டுகளுக்கு பிறகு அசரீரி என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். புதுமுக இயக்குனர் ஜிகே இயக்குகிறார். நீரவ்ஷா உதவியாளர் மருதநாயகம் ஒளிப்பதிவு செய்கிறார். மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.

அறிவியல் எவ்வாறு ஒரு குடும்பத்திற்குள் ஒரு உணர்ச்சி போராட்டத்தை உருவாக்குகிறது என்பதை மையமாகக் கொண்டது இப்படம் என்கிறார், இயக்குனர் ஜிகே.