
ஜெயம் ரவியின் அடுத்த படத்தின் டைட்டில் என்ன தெரியுமா.? தீயாய் பரவும் புதிய தகவல்.!
தமிழ் சினிமாவில் ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமாகி அதிகபட்ச ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றவர் நடிகர் ஜெயம் ரவி. அவரின் முதல் படமே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.
அண்மையில் இவர் நடிப்பில் வெளியான பூமி ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது ஜெயம் ரவியின் 28வது படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஜெயம் ரவி நடிக்கும் 28 படத்திற்கு அகிலன் என பெயரிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடிக்கிறார். சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.
மேலும் இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் இப்படத்தில் ஜெயம் ரவி கேங்ஸ்டராக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement