ஹிந்தியில் ரீமேக்காகும் சூப்பர்ஹிட் திரைப்படம்! நயன்தாராவாக நடிக்கப்போவது யார்னு பார்த்தீர்களா!Janvi kapoor act in kolamavu kokila dubbing in hindi

கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம்  கோலமாவு கோகிலா.  இப்படத்தில் நயன்தாரா, யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்துள்ளனர். மேலும் லைகா நிறுவனம் தயாரித்த இப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். மேலும் அனிருத் இசையமைத்துள்ளார் 

இந்த படம் வெற்றி பெற்று வசூல் சாதனையும் படைத்தது. அதனைத் தொடர்ந்து கோலமாவு கோகிலா திரைப்படத்தை பல மொழிகளிலும் ரீமேக் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் கன்னடத்தில் ரீமேக் செய்வது உறுதியானது.
அதனை தொடர்ந்து தற்போது இந்தியிலும் படம் ரீமேக் செய்வதும் உறுதியாகியுள்ளது. 

Janvi kapoor

மேலும் ஹிந்தியில் நயன்தாரா நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க மறைந்த முன்னணி நடிகையான ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனை அறிமுக இயக்குனரான சித்தார்த் சென் குப்தா என்பவர் இயக்கவுள்ளார். 
மேலும் ஆனந்த் எல்.ராய் தயாரிக்கவுள்ளார்.